திருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி
/

தேர்தல் வெற்றிக்குப் பிறகு திமுகவில் இணைந்த அதிமுகவினர்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெருமபாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆவடி மாநகராட்சியைச் சேர்ந்த அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர். 

News image

திமுகவில் இணைந்த அதிமுகவினர்

Updated On :22 பிப்ரவரி 2022, 2:50 pm

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெருமபாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆவடி மாநகராட்சியைச் சேர்ந்த அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர். 

இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, திருவள்ளூர் மத்திய மாவட்டம் அதிமுகவைச் சேர்ந்த ஆவடி மாநகராட்சி கவுன்சிலர் ஜி.ராஜேஷ், 14வது வட்டச் செயலாளர் என்.ஆனந்த்ராஜ் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். 

அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று அவர்கள் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்வின்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., பால்வளத் துறை அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளருமான மு. நாசர் ஆகியோர் உடன் இருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.