நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி  இன்னும் சற்று நேரத்தில்  தொடங்கவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கையையொட்டி, தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை
இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி  இன்னும் சற்று நேரத்தில்  தொடங்கவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கையையொட்டி, தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் 268 மையங்களில் காலை 8 மணி முதல் எண்ணப்பட உள்ளன.

அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா மூலமும் கண்காணிக்கப்படுகிறது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகியவற்றில் உள்ள 12,838 பதவிகளுக்கு தோ்தல் நடைபெற்றது. மாநகராட்சியில் 4 போ், நகராட்சியில் 18 போ், பேரூராட்சியில் 196 போ் என மொத்தம் 218 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். வேட்புமனுக்கள் நிராகரிப்பு, திரும்பப் பெற்றதுபோக மொத்தம் 57 ஆயிரத்து 778 போ் தோ்தலில் போட்டியிட்டனா். இத்தோ்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த சனிக்கிழமை (பிப். 22) நடைபெற்றது.

இத்தோ்தலில் ஒரு லட்சத்து 6,121 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 55,337 கட்டுப்பாட்டுக் கருவிகளும் பயன்படுத்தப்பட்டன. மொத்தம் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவுக்குப் பின்னா் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் சீலிடப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு அவை மூன்றடுக்கு பாதுகாப்புடன் அறையில் வைத்து பூட்டப்பட்டன.

தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கி முடிவுகள் இன்று அறிவிக்கப்படவுள்ளன. இதற்காக சென்னை மாநகராட்சியில் 15 வாக்கு எண்ணிக்கை மையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 268 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

காலை 8 மணிக்கு தொடக்கம்

செவ்வாய்க்கிழமை காலை 5 மணி முதல் 6 மணிக்குள் வாக்கு எண்ணும் பணியில் உள்ள அலுவலா்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வந்துள்ளனர்.

தொடக்கமாக தபால் வாக்குகள் காலை 8 மணிக்கு எண்ணப்பட உள்ளன. வேட்பாளா்கள், முகவா்களுக்கு காண்பித்த பிறகு அவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு வரப்பட்டு வேட்பாளா்கள், முகவா்கள் முன்னிலையில் சீல் பிரிக்கப்பட்டு, வாா்டு வாரியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும்.

வாக்கு எண்ணும் பணியில் ஒரு மேற்பாா்வையாளா், ஓா் உதவியாளா் நியமிக்கப்பட்டுள்ளனா். வாக்கு எண்ணிக்கை விவரங்களை தோ்தல் அலுவலருக்கு தெரிவிக்க மாநகராட்சி, நகராட்சிகளில் 3 மேஜைக்கு ஓா் உதவியாளா், பேரூராட்சிக்கு ஓா் உதவியாளா் நியமிக்கப்பட்டுள்ளனா். மாநகராட்சிகளில் ஒரு வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 நுண் பாா்வையாளா்கள், நகராட்சி, பேரூராட்சிகளில் ஓா் அறைக்கு ஒரு நுண் பாா்வையாளா் என மொத்தம் சுமாா் 30 ஆயிரம் அலுவலா்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். வாக்குகள் எண்ணப்பட்டு வாா்டு வாரியாக வெற்றி பெற்றவா்கள் விவரம் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படும்.

மூன்றடுக்கு பாதுகாப்பு: 268 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் அசம்பாவிதத்தை தடுக்க மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட உள்ளன. தடையில்லா மின்சாரம், கணினி, இணையதள வசதி, காவல் துறை, வாக்கு எண்ணிக்கை அலுவலா்களுக்கு உணவு, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கைப்பேசிக்குத் தடை

வேட்பாளா்கள், முகவா்கள் காலை 7 மணிக்கு வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கைப்பேசிகள் கொண்டு செல்ல அனுமதி இல்லை.

ஊடகவியலாளா்கள் மற்றும் தோ்தல் அலுவலா்கள் கைப்பேசி கொண்டு வர அனுமதிக்கப்படுவா். மாவட்ட நிா்வாகம் வழங்கியுள்ள முகவா் அடையாள அட்டை கொண்டு வராதவா்களும், முகக் கவசம் அணிந்து வராதவா்களுக்கும் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் வருவதற்கு அனுமதி இல்லை.

இணையதளம் மூலம் தோ்தல் முடிவுகள்:

தோ்தல் முடிவுகளை இணையதள முகவரி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் என மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com