ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கூத்தாநல்லூர் நகராட்சியை கைப்பற்றியது திமுக

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 பிப்ரவரி 2022, 12:19 pm

DIN

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூத்தாநல்லூர் நகராட்சியில் 24 வார்டுகளுக்கு, 145 வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்தனர். இதில், இரண்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 34 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டது. இறுதியாக, 109 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில், 1 ஆவது வார்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கு.தனலெட்சுமி 345, 2 ஆவது வார்டு திமுக ஆர்.புரோஜுதீன் 414,3 ஆவது வார்டு ம .முருகேசன் அதிமுக 385,4 ஆவது வார்டு சொற்கோ அதிமுக 395,

5 ஆவது வார்டு க.துரைமுருகன் திமுக 333,6 ஆவது வார்டு திமுக எஸ்.எஸ்.ஹாஜா நஜ்முதீன் 416, 7 ஆவது வார்டு திமுக பக்கிரி செல்வம் 305 , 8 ஆவது வார்டு திமுக கே.மாரியப்பன் 352, 9 ஆவது வார்டு திமுக எஸ்.முஹம்மது அபுபக்கர் சித்திக் 323, 10 ஆவது வார்டு திமுக ஜெய்புன்னிஸா 445, 11 ஆவது வார்டு திமுக க.தேவேந்திரன் 418, 12 ஆவது வார்டு அதிமுக கோ.சாந்தி 321, 13 ஆவது வார்டு திமுக எஸ்.வினோதினி 406,

14 ஆவது வார்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மு.சுதர்ஸன் 203, 15 ஆவது வார்டு சுயேட்சை ஏ.எம்.எஃப்.ச ப்ரினா பர்வீன் 220, 16 ஆவது வார்டு காங்கிரஸ் தாஹிரா 342, 17 ஆவது வார்டு திமுக எம்.பிரவீனா 461, 18 ஆவது வார்டு திமுக எம்.ஏ. மும்தாஜ் பேகம் 280, 19 ஆவது வார்டு திமுக ஜெ.பி.தாஹிரா தஸ்லிமா பேகம் 407, 20 ஆவது வார்டு திமுக மு.பாத்திமா பஷீரா 338, 21 ஆவது வார்டு திமுக அ.ஜெகபர் நாச்சியா 430, 22 ஆவது வார்டு திமுக ச.கஸ்தூரி 230,23 ஆவது வார்டு திமுக ர.முகம்மது காதர் மைதீன் 453, 24 ஆவது வார்டு திமுக சு.சண்முகம் 410 வாக்குகள் வெற்றி பெற்றுள்ளனர்.

மொத்தமாக திமுக 17, அதிமுக 3, இந்தியக் கம்யூனிஸ்ட் 2, காங்கிரஸ் 1, சுயேச்சை ஒன்று என வெற்றி பெற்று, திமுக தனிப் பெரும்பான்மையுடன் கூத்தாநல்லூர் நகராட்சியைக் கைப்பற்றியது.

வெற்றி பெற்ற 24 வேட்பாளர்களுக்கும், தேர்தல் நடத்தும் அலுவலரும், நகராட்சி ஆணையருமான ப.கிருஷ்ணவேணி வெற்றிச் சான்றிதழை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.