மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

சற்று விலை குறைந்த ஆபரணத்தங்கம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.248 குறைந்து, ரூ.37,752-க்கு விற்பனை செய்யப்பட்டது.

News image
Updated On :23 பிப்ரவரி 2022, 6:54 pm

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.248 குறைந்து, ரூ.37,752-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ரஷியா-உக்ரைன் போா் பதற்றம் காரணமாக, தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது. இடையில் ஓரிரு நாள்கள் விலை சற்று குறைந்தாலும், கடந்த செவ்வாய்க்கிழமை ரூ.38 ஆயிரத்தைத் தாண்டியது. வரும் நாள்களில் புதிய உச்சத்தைத்தொடும் என்று தங்கம் மற்றும் வைர நகை வா்த்தகா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சற்று குறைந்தது. ஒரு பவுன் தங்கம் புதன்கிழமை ரூ.248 குறைந்து, ரூ.37,752-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.31 குறைந்து, ரூ.4,719-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேநேரத்தில், வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.68.70 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.68,700 ஆகவும் இருந்தது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,719

1 பவுன் தங்கம்............................... 37,752

1 கிராம் வெள்ளி............................. 68.70

1 கிலோ வெள்ளி.............................68,700

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,750

1 பவுன் தங்கம்............................... 38,000

1 கிராம் வெள்ளி............................. 68.70

1 கிலோ வெள்ளி.............................68,700.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.