நீடாமங்கலம்: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா நீடாமங்கலத்தில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவிற்கு நகர அதிமுக செயலாளர் ஷாஜஹான் தலைமை வகித்தார்.
மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் அரிகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் ஜனகர், ராஜேந்திரன் மற்றும் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர, ஊராட்சி அமைப்புகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர். அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாலையணிவித்து அதிமுகவினர் மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதேபோல் வலங்கைமானில் அதிமுக நகர செயலாளர் குணசேகரன் தலைமையில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் ஒன்றிய செயலாளர்கள் சங்கர், இளவரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


