எடப்பாடி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாள் விழாவை அதிமுகவினர் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் நகர செயலாளர் ஏ.எம். முருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு அதிமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செய்தனர்.
தொடர்ந்து நகர அதிமுக சார்பில் ஏழை, எளியோர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க தலைவர் கந்தசாமி, முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் சி.ராமன், நகர மன்ற உறுப்பினர்கள் நாராயணன், ராம்குமார் உள்ளிட்ட திரளான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதேபோல் கொங்கணாபுரம் பேருந்து நிலையம் அருகில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கரட்டூர்மணி தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்து பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகளுக்கு அதிமுகவினர் இனிப்புகளை வழங்கி ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாடினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


