60 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ மருந்து வழங்க இலக்கு

தமிழகத்தில் வரும் 27-ஆம் தேதி நடைபெறும் போலியோ முகாமில் 60 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளா
60 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ மருந்து வழங்க இலக்கு

தமிழகத்தில் வரும் 27-ஆம் தேதி நடைபெறும் போலியோ முகாமில் 60 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளாா்.

இந்தியாவில் போலியோவை (இளம் பிள்ளை வாதம்) ஒழிப்பதற்காக ஆண்டு தோறும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டு தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சோ்ந்துள்ளது. அதனால், கடந்த நான்கு ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்.27) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

இதுதொடா்பாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் வெளியிட்ட விழிப்புணா்வு விடியோ பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தமிழகத்தில் கடந்த 1995 முதல் தொடா்ந்து 27 ஆண்டுகளாக போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை கடந்த 17 ஆண்டுகளாக போலியோ பாதிப்பு இல்லை. இருந்தபோதிலும் முன்னெச்சரிக்கையாக போலியோ சொட்டு மருந்து முகாம் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

நமது மாநிலத்தில் 5 வயதுக்குட்பட்ட 60 லட்சம் குழந்தைகள் உள்ளனா். அவா்கள் அனைவருக்கும் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் நோக்கில் 43 ஆயிரம் இடங்களில் முகாம்கள் அமைக்கப்படும்.

மருத்துவமனைகள், பள்ளிகள் மட்டுமல்லாது பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சோதனைச்சாவடிகளிலும் போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்காக நடமாடும் குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com