பதிவுத்துறை ரூ.12,000 கோடி வருவாயினை கடந்துள்ளது: அமைச்சர் பி.மூர்த்தி
பதிவுத்துறை ரூ.12,000 கோடி வருவாயினை கடந்ததற்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.


பதிவுத்துறை ரூ.12,000 கோடி வருவாயினை கடந்ததற்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் அனைத்து துணைப் பதிவுத்துறை தலைவர்கள், மாவட்டப் பதிவாளர்கள் (நிர்வாகம்) மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரை) மற்றும் தனித்துணை ஆட்சியர்கள் (முத்திரை) ஆகியோர்களின் ஜனவரி 2022 மாத பணி சீராய்வு கூட்டம் 25.02.2022 அன்று காலை சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசுச் செயலாளர் பா.ஜோதிநிர்மலாசாமி, பதிவுத்துறை தலைவர் ம.ப.சிவன் அருள், கூடுதல் பதிவுத்துறை தலைவர்கள், பதிவுத்துறை தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) மற்றும் உதவிப்பதிவுத் துறை தலைவர்கள்- பதிவுத்துறை தலைவர் அலுவலகம், அனைத்து துணைப் பதிவுத்துறை தலைவர்கள், மாவட்டப் பதிவாளர்கள் (நிர்வாகம்) மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரை) மற்றும் தனித்துணை ஆட்சியர் (முத்திரை) ஆகியோர் கலந்துகொண்டனர். இச்சீராய்வு கூட்டத்தில் ரூ.12,000 கோடி வருவாயை பதிவுத்துறை கடந்துள்ளதற்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பாராட்டுகளை தெரிவித்தார்.
இதையும் படிக்க- 219 இந்தியர்களுடன் மும்பை வந்தடைந்தது ஏர் இந்தியா விமானம்
ஜனவரி 2022 மாதத்தில் வருவாய் ரூ.931.03 கோடி ஈட்டப்பட்டுள்ளது; இது சென்ற நிதியாண்டில் ஜனவரி 2021 மாத வருவாயை காட்டிலும் ரூ.34.32 கோடி அதிகமாகும். 2021-22 நிதியாண்டில் ஜனவரி 2022 முடிய வருவாய் ரூ.10785.44 கோடி ஈட்டப்பட்டுள்ளது. பிப்ரவரி 2022 மாதத்தில் 25.02.2022 முடிய வருவாய் ரூ.1217.00 கோடி என்ற நிலையில் 25.02.2022 அன்று வரை ரூ.12003.00 கோடி வருவாயாக பதிவுத்துறையில் ஈட்டப்பட்டுள்ளது.
அனைத்து துணைப் பதிவுத்துறை தலைவர்கள் மற்றும் மாவட்டப் பதிவாளர்கள் (நிர்வாகம்) ஆகியோர் பதிவுத்துறைக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை எவ்வித கசிவுமின்றி வசூலிக்க முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும், அனைத்து மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரை) மற்றும் தனித்துணை ஆட்சியர் (முத்திரை) ஆகியோரும் தங்களுக்கு அனுப்பப்படும் குறைவு முத்திரைத் தீர்வைக்கான முன்மொழிவுகள் மீது உரிய களப்பணி மேற்கொண்டு நியாயமான முறையில் சட்டபூர்வமாக செயல்பட்டு உரிய மதிப்பினை உடனுக்குடன் வழங்க வேண்டுமெனவும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...