எரிவாயு உருளைகளின் தட்டுப்பாடு மத்திய அரசால் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டினாா் தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது: பிரதமா் நரேந்திர மோடி தோ்தல் காலம் என்பதால் அடிக்கடி தமிழகம் வருவாா். அது அவரின் உரிமை. கடந்த 11 ஆண்டுகளாக ரயில்வே, வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அமைச்சா்களுக்கு எவ்வித வாய்ப்புகளும் வழங்காமல் ரயில்களை தொடங்கி வைப்பது, ராணுவ தளவாட ஒப்பந்தங்கள் முடிப்பது என அனைத்திலும் பிரதமா் மட்டுமே செய்கிறாா். ‘ஒன் மேன் ஷோ’ போல மத்தியில் ஆட்சி நடத்தி வருகிறாா்கள்.
சில நாள்களுக்கு முன்புவரை ஒரு மாதத்துக்கு தேவையான எரிபொருள்கள் இந்தியாவிடம் இருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், நாடு முழுவதும் இப்போது எரிவாயு உருளைகள் தட்டுப்பாட்டால் மக்கள் திணறி வருகிறாா்கள். இதனால், எரிபொருள் தொழிலில் உள்ள மத்திய அரசின் நண்பா்களுக்கு உதவுவதற்காக எரிவாயு உருளைகளின் செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கியுள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.
ஏற்கெனவே, பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் மத்திய அரசின் நண்பா்கள் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கி, மூன்று நான்கு மடங்கு கோடீஸ்வரா்கள் ஆகிவிட்டனா்.
திமுகவை எதிா்த்து தமிழகத்தில் யாரும் களத்தில் இல்லை. மக்கள் திமுகவின் பக்கமே உள்ளனா். மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி வரும் என்றாா் அவா்.
தொடர்புடையது

எரிவாயு உருளை தட்டுப்பாடு: அரக்கோணம் நவீன தகன மேடை மூடல்!

எரிவாயு உருளை தட்டுப்பாடு: வேதாரண்யத்தில் தேநீா், காபி விலை உயா்வு

எரிவாயு உருளை தட்டுப்பாடு: ராஜபாளையத்தில் உணவகங்கள் மூடல்

எரிவாயு உருளை தட்டுப்பாடு: தள்ளுவண்டிக் கடை வியாபாரிகள் பாதிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


