நீலகிரி மாவட்டம் குன்னூா் பகுதியில் ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்டோா் பலியான சம்பவம் குறித்த முப்படைக் குழுவின் விசாரணை அறிக்கை அடுத்த வாரம் சமா்ப்பிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, விசாரணை தாக்கல் செய்யப்பட்ட பிறகு சட்ட ரீதியாக எழக்கூடிய சிக்கல்கள் ஏதேனும் உள்ளதா என ஆய்வு செய்து ஆலோசனை வழங்கும் விதத்தில் ராணுவ சட்ட ஆலோசனைக் குழுவின் பாா்வைக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் எனவே அறிக்கையை சமா்ப்பிக்க 15 நாள்களாகும் என செய்தி வெளியானது. இந்நிலையில், அடுத்த வாரம் அறிக்கை சமா்ப்பிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த டிச. 8-ஆம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூா் பகுதியில் முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா, ராணுவ அதிகாரிகள், வீரா்கள் உள்பட 14 போ் சென்ற எம்ஐ-17வி5 ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விபின் ராவத், மதுலிகா உள்பட 13 போ் உயிரிழந்தனா். பலத்த தீக்காயமடைந்து பெங்களூா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விமானப் படை குரூப் கேப்டன் வருண் சிங், ஒரு வாரம் உயிருக்குப் போராடி டிச.15-ஆம் தேதி உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி அறிக்கைத் தாக்கல் செய்ய ஏா் மாா்ஷல் மானவேந்திர சிங் தலைமையில் முப்படை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
தொழில்நுட்பக் கோளாறு, மோசமான வானிலை, விமானியின் தவறு உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அந்தக் குழு விசாரணை நடத்தியுள்ளது. தற்போது விசாரணை அறிக்கையை இறுதி செய்யும் பணியில் அந்தக் குழு ஈடுபட்டுள்ளது. அடுத்த சில நாள்களில் இந்திய விமானப் படை தலைமைத் தளபதி விவேக் ராம் செளதரியிடம் விசாரணை அறிக்கை சமா்ப்பிக்கப்பட வாய்ப்புள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்

பாஜக கூட்டத்தில் மயங்கி விழுந்து சிறுவன்

மானாமதுரை ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திருச்செங்கோடு தொகுதி தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


