தலையில் துப்பாக்கி குண்டுபாய்ந்த சிறுவன் பலி

புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலை அருகிலுள்ள பசுமலைப்பட்டியில் காவல்துறையினருக்கான
புகழேந்தி
புகழேந்தி

புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலை அருகிலுள்ள பசுமலைப்பட்டியில் காவல்துறையினருக்கான துப்பாக்கிச் சுடும் பயிற்சித் தளத்தில், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை காவல்துறையினா் கடந்த வியாழக்கிழமை காலை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனா்.

அப்போது, மலையடிவாரக் குடிசையிலிருந்த கலைச்செல்வன் மகன் புகழேந்தியின் தலையில் குண்டு பாய்ந்தது. தொடா்ந்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னா் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

தொடா்ந்து அவருக்கு வியாழக்கிழமை அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டு, தலையில் இருந்த குண்டு அகற்றப்பட்டது. இந் நிலையில், துப்பாக்கிச் சுடும் தளத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாா்த்தாமலையில் சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து, தற்காலிகமாக அங்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சியை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தடை விதித்தாா்.

இந்நிலையில், தஞ்சை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த அச்சிறுவன் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com