ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பிரதமரின் புதுச்சேரி வருகையும் ரத்து

பிரதமர் நரேந்திர மோடியின் புதுச்சேரி வருகை ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். 

News image
கோப்புப்படம்
Updated On :7 ஜனவரி 2022, 9:27 am

DIN

பிரதமர் நரேந்திர மோடியின் புதுச்சேரி வருகை ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். 

வருகிற ஜனவரி 12 ஆம் தேதி மதுரை பொங்கல் விழாவில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவிருந்தார். அப்போது புதுச்சேரியில் நடைபெறும் இளைஞர் தின விழாவிலும் பிரதமர் கலந்துகொள்ளவிருப்பதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், ஒமைக்ரான் பரவல் காரணமாக மதுரையில் பிரதமர் மோடி கலந்துகொள்ளவிருந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை நேற்று தெரிவித்தார். 

இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியின் புதுச்சேரி வருகையும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். ஆனால், ஜனவரி 12 ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெறும் இளைஞர் தின விழாவில் காணொலி மூலமாக கலந்துகொள்வார் என்று கூறிய அவர், புதுச்சேரியில் ரூ. 490 கோடி மதிப்பில் 10 பொருள்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.