சென்னை வெள்ள பாதிப்புக்கு முதற்கட்டமாக ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு: முதல்வர்
சென்னை வெள்ள பாதிப்புக்கு முதற்கட்டமாக ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


சென்னை வெள்ள பாதிப்புக்கு முதற்கட்டமாக ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பதிலுரை அளித்து வருகிறார்.
இதில் தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்தும் பல புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில், சென்னை வெள்ள பாதிப்புக்கு முதற்கட்டமாக ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னையில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை சீர்செய்யவும், மீண்டும் பாதிப்பைத் தடுக்கவும் நிதி ஒதுக்கப்படும் என்றார்.
அதுபோல, 1.62 லட்சம் ஹெக்டேர் பயிர் பாதிப்புக்கு நிவாரண நிதியாக ரூ.132 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...