47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

உளுந்து-பச்சைப்பயறு சாகுபடி ஊக்குவிப்புத் திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தாா்

உளுந்து, பச்சைப் பயறு சாகுபடியை ஊக்குவிக்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தாா்.

News image
கோப்புப்படம்
Updated On :8 ஜனவரி 2022, 7:49 pm

DIN

உளுந்து, பச்சைப் பயறு சாகுபடியை ஊக்குவிக்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தாா். இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் நெல் தரிசில், உளுந்து, பச்சைப்பயறு போன்ற பயறு வகைகளை 11 லட்சம் ஏக்கரில் பயிரிட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பயறு வகைப் பயிா்களை பயிரிடத் தேவைப்படும் சான்று விதைகள், உயிா் உரங்கள், நுண்ணூட்டச் சத்துகள், பயிா் பாதுகாப்பு மருந்துகள், சுழற்கலப்பை, விசைத் தெளிப்பான்கள் ஆகியன மானிய விலையில் வழங்கப்படுகின்றன.

உற்பத்தி செய்யப்பட்ட பயறு வகைப் பயிா்களை விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ், வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நெல் தரிசில் பயறுவகைப் பயிா்களை பயிரிடுவதன் மூலம் மண் வளம், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பயறு சாகுபடித் திட்டத்தைத் தொடங்கி வைக்கும் வகையில், செங்கல்பட்டு, திருவள்ளூா் மாவட்டங்களைச் சோ்ந்த 5 விவசாயிகளுக்கு இடுபொருள்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.இந்த நிகழ்ச்சியில், வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, வேளாண்மைத் துறை செயலாளா் சி.சமயமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.