புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

விருதுநகர் எம்எல்ஏ-வுக்கு கரோனா 

விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினரான ஏ ஆர் ஆர் சீனிவாசனுக்கு தொடர் காய்ச்சல் இருந்து வந்தது.

News image

விருதுநகர் எம்எல்ஏ-வுக்கு கரோனா 

Updated On :10 ஜனவரி 2022, 12:54 pm

DIN


விருதுநகர்: விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினரான ஏ ஆர் ஆர் சீனிவாசனுக்கு தொடர் காய்ச்சல் இருந்து வந்தது. இதையடுத்து அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த ஏ ஆர் ஆர் சீனிவாசன் உள்ளார். இவர் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சனிக்கிழமை விருதுநகர் திரும்பினார். அப்போது அவருக்கு காய்ச்சல், சளி மற்றும் உடல் வலி இருந்ததால் விருதுநகர் அரசு மருத்துவமனையில் ஆர் டி பி சி ஆர் பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. 

இதைத்தொடர்ந்து அவர், மருத்துவர்கள் ஆலோசனைப்படி மீசலூர் அருகே உள்ள அழகாபுரியில் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.