தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்திலும் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி புதிய கரோனா கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தியது. மேலும் ஜனவரி 6 முதல் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறுகளில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டோருடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பொங்கல் பண்டிகை வருவதால் அதுகுறித்த கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | தமிழகத்தில் ஞாயிறு, இரவுநேர முழு ஊரடங்கு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரு நடைமேடை வியாபாரிகள் பலி! காய்கறி விற்பவர்கள் வளாகத்தைத் தொடக் கூடாது: கார்கே

மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


