மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

ஜன. 31 வரை 1-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, கல்லூரிகளுக்கு விடுமுறை

1-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
ஜன. 31 வரை 1-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, கல்லூரிகளுக்கு விடுமுறை
Updated On :11 ஜனவரி 2022, 2:45 am

DIN


சென்னை: தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், 1-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 20ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஊரடங்கு உத்தரவு ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், 1 முதல் 9ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கும், அனைத்து கல்லூரிகளுக்கும் ஜனவரி 31 வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உயர்கல்வித் துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ஜனவரி 31ஆம் தேதி வரை அனைத்து கலை, அறிவியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. 

கல்லூரி மாணவர்களுக்கு பருவத் தேர்வு நடத்தப்படுவது குறித்து, தேர்வுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, பள்ளி விடுமுறை நீட்டிப்பு குறித்து பள்ளிக் கல்வித் துறை அளித்திருக்கும் விளக்கத்தில் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இவர்களுக்கு ஆன்லைன் மற்றும் கல்வித் தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடத்தப்படும். பொதுத் தேர்வு எழுதவிருக்கும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.