சென்னையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு
சென்னையில் பல்வேறு இடங்களில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா புதன்கிழமை ஆய்வு செய்தார்.


சென்னையில் பல்வேறு இடங்களில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா புதன்கிழமை ஆய்வு செய்தார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, சென்னையில் இன்று பொது சுகாதாரத்துறை வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள 108 அவசர எண் கட்டுப்பாட்டு அறையை அவர் பார்வையிட்டார். அப்போது 108 வாகன மருத்துவப் பணியாளர்கள் முதலுதவி செய்வது குறித்து விளக்கினர். மேலும், 108 எண்ணுக்கு வரும் அழைப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர் இருப்பு குறித்து கேட்டறிந்தார். சிலிண்டர்கள் எண்ணிக்கையை தேவையான அளவு பராமரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
கரோனா கட்டுப்பாட்டு அறை - அவசர எண் 104 குறித்த விவரங்களை கேட்டறிந்த மத்திய அமைச்சரிடம் அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதார இயக்குனர் செல்வவிநாயகம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
முன்னதாக இன்று காலை சென்னை வந்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவைத் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் வரவேற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...