தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 35,833 ஆனது

சென்னையில் ஜனவரி 12ஆம் தேதி காலை நிலவரப்படி 35,833 பேர் கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

News image
சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 35,833 ஆனது
Updated On :12 ஜனவரி 2022, 12:25 pm

DIN


சென்னை: சென்னையில் ஜனவரி 12ஆம் தேதி காலை நிலவரப்படி 35,833 பேர் கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் இதுவரை ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 6.01 லட்சமாக உள்ளது. 5.56 லட்சம் பேர் குணமடைந்துவிட்டனர். 8,689 பேர் பலியாகிவிட்டனர்.  கரோனா பாதித்து 35,833 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது மொத்த பாதிப்பில் 6 சதவீதமாகும்.

சென்னையில் நாள்தோறும் பதிவாகும் புதிய கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இன்று அதிகபட்சமாக 35 ஆயிரம் கரோனா நோயாளிகள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும், மருத்துவமனைகளிலும் உள்ளனர்.

இதில் அதிகபட்சமாக, அண்ணாநகரில் 1007 பேரும், தேனாம்பேட்டையில் 992 பேரும், கோடம்டபாக்கத்தில் 979 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.