மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!பிகார் முதல்வர் பதவிலிருந்து விலகுகிறேன்! நிதீஷ் குமார் அறிவிப்பு!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை பொங்கல் வாழ்த்து

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழக மக்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

News image
Updated On :13 ஜனவரி 2022, 8:17 am

DIN

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழக மக்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், பொங்கல் திருநாளில், தமிழகம், புதுச்சேரி, தெலங்கானா மக்களுக்கும் உலகத் தமிழர் அனைவருக்கும் என்னுடைய இதயங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமான பொங்கல் திருவிழா, உழவுத் தொழிலுக்கும் அதற்கு உறுதுணையாக இருக்கும் இயற்கைக்கும் கால்நடைகளுக்கும பெருமை சேர்க்கும் திருவிழா. உழவு செழித்தால் உலகம் செழிக்கும்.
பொங்கலுக்கு மண் பானை, மண் சட்டி, மண் அடுப்பு என மண்ணால் செய்யப்பட்ட பொருட்களை வாங்கி மண்பாண்டத் தொழிலை ஆதரிப்போம். 
தைப்பொங்கல் திருநாளில் அனைவரது வாழ்விலும் எல்லா வளங்களும் பெருகி சீரோடும் சிறப்போடும் வாழ வாழ்த்துகிறேன்.

கரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் அனைவரும் பாதுகாப்பாக பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வேண்டும். இந்த போகி நாளன்று கரோனாவை முழுமையாக கொளுத்துவோம். டயர்கள் கொளுத்துவதைத் தவிர்ப்போம். சுற்றுச் சூழலைப் பாதுகாப்போம் என்று தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.