மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000! மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடுஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்புதுச்சேரி, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்தது!செங்கோட்டையனின் வேட்புமனு ஏற்புபுதுவை, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்ததுசென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்போடியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் வேட்புமனுக்கள் ஏற்புசெந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு: 24 காளைகளை அடக்கிய வீரருக்கு முதல் பரிசு!

பொங்கல் திருநாளை முன்னிட்டு தொடங்கிய உலக புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது.

News image

கோப்புப்படம்

Updated On :14 ஜனவரி 2022, 12:11 pm

பொங்கல் திருநாளை முன்னிட்டு தொடங்கிய உலக புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது.

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு அலங்காநல்லூா் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதில் 624 காளைகளும் 300 வீரர்களும் கலந்துகொண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று வெள்ளிக்கிழமை (ஜன.14) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்தநிலையில்  7 சுற்றுகளுடன் தற்போது நிறைவடைந்துள்ளது.

இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் 24 காளைகளை அடக்கி முதல் பரிசை வென்றார்.  19 காளைகளை அடக்கிய முருகன் இரண்டாம் இடத்தையும் 11 காளைகளை அடக்கிய பரத் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

முதல் பரிசு முதல்வர் ஸ்டாலின் சார்பாக காரும், இரண்டாவது பரிசு இருசக்கர வாகனமும், 3-வது பரிசாக பசுக்கன்றும் வீரர்களுக்கு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.