மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சங்ககிரி ஒன்றிய, நகர திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா

சேலம் மேற்கு மாவட்டம், சங்ககிரி ஒன்றிய, நகர திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா, தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாகவும் கொண்டாடும் நிகழ்ச்சி சங்ககிரி திமுக ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. 

News image
சங்ககிரி ஒன்றிய திமுக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் விழாவில் சூரிய பகவானை வணங்குகிறார் சேலம் மேற்குமாவட்ட செயலர் (பொ) டி.எம்.செல்வகணபதி.
Updated On :14 ஜனவரி 2022, 7:18 am

DIN


சங்ககிரி: சேலம் மேற்கு மாவட்டம், சங்ககிரி ஒன்றிய, நகர திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா, தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாகவும் கொண்டாடும் நிகழ்ச்சி சங்ககிரி திமுக ஒன்றிய அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

சேலம் மேற்கு மாவட்டச் செயலர் (பொறுப்பு) டி.எம்.செல்வகணபதி இவ்விழாவிற்கு தலைமை வகித்து சமத்துவ பொங்கல் வைக்கும் வைபவத்தில் கலந்துகொண்டு சூரிய பகவானை வணங்கினார். 

Story image

சங்ககிரி ஒன்றிய திமுக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் விழாவினையொட்டி சேலம் மேற்குமாவட்ட செயலர் (பொ) டி.எம்.செல்வகணபதி மகளிரணி நிர்வாகிகளுக்கு பொங்கல், கரும்புகளை வழங்கி வாழ்த்து தெரிவிக்கிறார்.

பின்னர் கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் தமிழ்புத்தாண்டு வாழ்த்துகளை கூறினார். அதனையடுத்து கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் அனைவருக்கும் பொங்கல், கரும்பு, சுண்டல் ஆகியவைகளை வழங்கிப் பேசினார். முன்னதாக அவர் திமுக கட்சி கொடியை ஏற்றி வைத்தார். 

சங்ககிரி முன்னாள் ஒன்றியச் செயலர் பி.தங்கமுத்து முன்னிலை வகித்தார். நகரச் செயலர் எல்ஐசி சுப்ரமணி வரவேற்றார். மாவட்ட துணை செயலர்கள் க.சுந்தரம், சம்பத்குமார், முன்னாள் பால்வளத்தலைவர் எம்.சின்னதம்பி, மேற்கு மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளர்  எஸ்.கிறிஸ்டோபர், துணை அமைப்பாளர்கள் ஆர்.அருள்பிரகாஷ், மாணிக்கசுந்தர், முன்னாள் நகரச் செயலர் முருகன்,முன்னாள் மாவட்ட பிரதிநிதி தளபதி சண்முகம் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.