ஞாயிறன்று ஊரடங்கு: காசிமேட்டில் மீன்வாங்கக் குவியும் மக்கள்
சென்னை: தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இரவு நேர ஊரடங்கு, ஞாயிறன்று முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
அத்தியாவசியச் சேவைகள் தவிர, பிற வாகனப் போக்குவரத்துக்குக்கு ஞாயிறன்று தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுவனுக்காக பள்ளிச் செல்லும் அவதார் ரோபோ
நேற்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுவதாலும், நாளை ஞாயிறன்று ஊரடங்கு என்பதாலும், மீன் வாங்க ஏராளமானோர் இன்று காலையிலேயே காசிமேடு மீன்சந்தையில் குவிந்தனர்.
காலை முதலே மீன்சந்தைக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கரோனா விதிமீறலையும் தாண்டி, ஆயிரக்கணக்கானோர் காசிமேடு மீன்சந்தையில் குவிந்திருப்பதால் கரோனா பரவும் அபாயம் உருவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

