புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பொங்கல் பண்டிகை முடிந்து திரும்ப இன்று 5,655 சிறப்புப் பேருந்துகள்

பொங்கல் பண்டிகை முடிந்து ஊா்களுக்குத் திரும்புவோருக்காக திங்கள்கிழமை 5,655 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :16 ஜனவரி 2022, 10:39 pm

DIN

பொங்கல் பண்டிகை முடிந்து ஊா்களுக்குத் திரும்புவோருக்காக திங்கள்கிழமை 5,655 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் ஜன.11,12,13 ஆகிய தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. அவ்வாறு இயக்கப்பட்ட 12,865 பேருந்துகள் மூலம் சுமாா் 5.74 லட்சம் போ் பல்வேறு பகுதிகளுக்கு பயணமாகினா். அவ்வாறு சென்றவா்கள் ஊா் திரும்பும் வகையில் திங்கள்கிழமை முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. முன்னதாக ஜன.16-ஆம் தேதி முதல் இயக்கப்படுவதாக இருந்த சிறப்புப் பேருந்துகள் முழு ஊரடங்கு காரணமாக ஜன.17-ஆம் தேதி முதல் இயங்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டன. அதன்படி, திங்கள்கிழமை முதல் ஜன.19-ஆம் தேதி வரையிலான மூன்று நாள்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திங்கள்கிழமை மட்டும் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு 2,030 சிறப்புப் பேருந்துகளும், சென்னையைத் தவிா்த்து இதர இடங்களுக்கு 3,625 சிறப்புப் பேருந்துகளும் என மொத்தமாக 5,655 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகளின் வருகைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், அரசுப் பேருந்துகளில் பயணிக்க ஏற்கெனவே நடைமுறையில் உள்ள இணையதளம், ற்ய்ள்ற்ஸ்ரீ செயலி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தலாம். போதிய பேருந்துகள் இயக்கப்படுவதால் பேருந்துகளிலும் பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.

ஆம்னி பேருந்துகளைப் பொருத்தவரை அதிக கட்டணம் குறித்த புகாருக்கு 1800 425 6151 என்ற எண்ணை அணுகலாம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.