தமிழகத்தில் புதிதாக 23,975 பேருக்கு கரோனா
அடுத்த சில நாள்களுக்குள் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்துவிடும் என அஞ்சப்படுகிறது.


தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 23,975 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்றுப் பரவல் இதே வேகத்தில் தொடா்ந்தால், அடுத்த சில நாள்களுக்குள் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்துவிடும் என அஞ்சப்படுகிறது.
மொத்த பாதிப்பில் 40 சதவீதம் சென்னையில் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக, நகரில் உள்ள முக்கிய மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் மருத்துவக் கண்காணிப்பில் ஒரு லட்சத்து 42,476 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், கோவை மட்டுமல்லாது மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கடந்த சில நாள்களாக தொற்று எண்ணிக்கை 3 முதல் 5 மடங்கு வரை அதிகரித்துள்ளது.
மக்கள் நல்வாழ்வுத் துறை தகவலின்படி, ஞாயிற்றுக்கிழமை மட்டும் சென்னையில் 8,987 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்த எண்ணிக்கை இதுவரை இல்லாத புதிய உச்சமாகும். அதற்கடுத்தபடியாக செங்கல்பட்டில் 2,701 பேரும், கோவையில் 1,866 பேரும், திருவள்ளூரில் 1,273 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
மற்றொருபுறம், மேலும் 12,484 போ் கரோனா பாதிப்பிலிருந்து விடுபட்டு ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 27 லட்சத்து 60,458-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 22 போ் பலியாகியதை அடுத்து தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,989-ஆக அதிகரித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...