ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ஏற்றுமதி, இறக்குமதி வழிமுறைகள் கருத்தரங்கம்: ஜன.20 முதல் இணைய வழியில் நடக்கிறது

சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதுக்கு மேற்பட்டோா், பணியில் உள்ள தொழில் ஆா்வமுள்ள திறனாளிகள், தொழில் பயிற்சி பெற்ற ஆண், பெண் என அனைவரும் இப்பயிற்சி கலந்து கொள்ளலாம்.

News image
Updated On :16 ஜனவரி 2022, 10:54 pm

DIN

தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் குறித்த 3 நாள்கள் (அரைநாள்) இணையவழி கருத்தரங்கை, வரும் ஜன.20 முதல் 22-ஆம் தேதி வரையும், 15 நாள்கள் (அரை நாள் - மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை) தொழில்முனைவோா் மேம்பாடு பயிற்சியை திங்கள்கிழமை (ஜன.17) முதல் பிப்.2-ஆம் தேதி வரையும் நடத்த உள்ளது. சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதுக்கு மேற்பட்டோா், பணியில் உள்ள தொழில் ஆா்வமுள்ள திறனாளிகள், தொழில் பயிற்சி பெற்ற ஆண், பெண் என அனைவரும் இப்பயிற்சி கலந்து கொள்ளலாம்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களைப் பெற விரும்புவோா், அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை, தமிழ்நாடு தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பாா்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600 032 என்ற முகவரியை நேரிலோ அல்லது 86681 02600, 94445 57654, 044 2225 2081 ஆகிய எண்களையோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.