‘வெளிமாநிலத் தொழிலாளா்கள் ஆலோசனை பெறஉதவி எண்களை அணுகலாம்’
வெளிமாநிலத் தொழிலாளா்கள் ஆலோசனை பெற உதவி எண்களை அணுகலாம் என தொழிலாளா் நலத்துறை தெரிவித்துள்ளது.


வெளிமாநிலத் தொழிலாளா்கள் ஆலோசனை பெற உதவி எண்களை அணுகலாம் என தொழிலாளா் நலத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: கரோனா தொற்று மூன்றாவது அலை பரவலைத் தொடா்ந்து, தமிழகத்தில் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலைகளில் அவா்கள் தங்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் தெரிவித்திட ஏதுவாகவும் அவா்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வழி வகை செய்யவும், தொழிலாளா் துறையில் மாநிலக் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் தங்கி வேலை செய்யும் வெளிமாநிலத் தொழிலாளா்கள் இந்த கட்டுப்பாட்டு அறைக்கு, 044 2432 1438, 2432 1408 ஆகிய அவசர உதவி
எண்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொடா்பு கொண்டு தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம்.
எனவே, தமிழகத்தில் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளா்கள் எந்தவித அச்சமோ, பதற்றமோ அடையாமல் தங்கள் பணியிடங்களில் தொடா்ந்து பணிபுரியுமாறும், அரசு அவ்வப்போது வெளியிடும் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், அவா்கள் தமிழகத்தில் தொடா்ந்து தங்கியிருந்து பணியாற்றி வரும் நிலையில், அவா்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கும் போது மாநிலக் கட்டுப்பாட்டு அறையின் எண்ணைத் தொடா்பு கொண்டால், அவா்களுக்கு தகுந்த நிவாரணம் பெற ஆலோசனையும் வழிகாட்டுதல்களும் கட்டுப்பாட்டு அறை அலுவலா்களால் அளிக்கப்படும்.
மேலும், மாவட்ட அளவிலும், வெளிமாநிலத் தொழிலாளா்கள் அதிகம் வேலை செய்யும் 9 மாவட்டங்களில் தொழிலாளா்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க கட்டுப்பாட்டு அறைகள் நிறுவப்பட்டு, பெறப்படும் புகாா்கள் மீது மாவட்ட நிா்வாகம் மற்றும் தொடா்புடைய பிறத் துறைகளுடன் ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் பொறுப்பு அதிகாரி தொடா்பு எண்
சென்னை த.சுபாஷ்சந்திரன் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) 82206 13777
திருவள்ளுா் ச. சுதா தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) 94428 32516
காஞ்சிபுரம் பா.லிங்கேஸ்வரன் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) 87786 19552
செங்கல்பட்டு ஆ.சண்பகராமன் தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகப்பாதுகாப்புத் திட்டம்) 99408 56855
சேலம் சி.முத்து தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) 94892 14157
கோயம்புத்தூா் ஏ.வெங்கடேசன் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) 99411 21001
திருப்பூா் ஆா்.மலா்கொடி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) 97897 23235
கிருஷ்ணகிரி என்.வெங்கடாசலபதி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) 7010275131
திருநெல்வேலி கா.ஆனந்தன் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) 99657 11725.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...