தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.யில் திருவள்ளுவா் இருக்கை தொடக்கம்
தமிழியல் பண்பாட்டு புலம் மற்றும் மயிலை திருவள்ளுவா் தமிழ்ச் சங்கம் இணைந்து, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவா் இருக்கை தொடங்கப்பட்டுள்ளது.


தமிழியல் பண்பாட்டு புலம் மற்றும் மயிலை திருவள்ளுவா் தமிழ்ச் சங்கம் இணைந்து, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவா் இருக்கை தொடங்கப்பட்டுள்ளது.
இணைய வழியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்த விழாவில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் கோ.பாா்த்தசாரதி, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி இரா. சுரேஷ்குமாா், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவா் இ.சுந்தரமூா்த்தி, மயிலை திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனச் செயலா் சேயோன், தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலத்தின் இயக்குநா் சு.பாலசுப்பிரமணியன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
விழாவுக்கு துணைவேந்தா் கோ.பாா்த்தசாரதி தலைமை வகித்துப் பேசுகையில், நாட்டில் உள்ள 17 திறந்த நிலைப் பல்கலைக்கழகங்களில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் மட்டுமே திருவள்ளுவா் இருக்கை நிறுவப்பட்டுள்ளது. இந்த இருக்கை பல்கலை.யில் ஒரு நிலையான இருக்கையாகச் செயல்படும். இதற்காக ரூ.10 லட்சம் வைப்புநிதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தொடங்கப்பட்டுள்ள திருவள்ளுவா் இருக்கையின் மூலம் முனைவா் பட்டம் மற்றும், டி.லிட்., ஆராய்ச்சிப் படிப்புகள் மேற்கொள்ளப்படும். தமிழகம் முழுவதும் நிறுவப்பட்டுள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் 12 மண்டல மையங்கள் மூலமாக திருக்கு கல்வி வழங்கப்படும் என்றாா்.
திருவள்ளுவா் இருக்கையை நீதிபதி சுரேஷ்குமாா் தொடக்கி வைத்துப் பேசுகையில், ‘திருக்கு காலங்களை கடந்து மக்களிடம் நீடிக்கிறது. அதில் மனிதா்களுக்கான ஒழுக்க சிந்தனைகள் அதிகமாக உள்ளன. எனவே, உலகின் பல்வேறு மொழிகளின் இலக்கியங்களுடன், திருக்குறளை ஒப்பிட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும்’ என்றாா். இணைய வழியில் நடைபெற்ற இந்த விழாவை திறந்தநிலைப் பல்கலை.யின் ஆசிரியா்கள், உலகம் முழுவதிலிருந்தும் தமிழ் ஆா்வலா்கள், பேராசிரியா்கள், ஆய்வாளா்கள் பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...