பயிற்சி மாவட்டக் கல்வி அலுவலா்கள் 20 பேருக்கு பணியிடம் ஒதுக்கீடு
பள்ளிக் கல்வித் துறையில் பயிற்சி மாவட்டக் கல்வி அலுவலா்கள் 20 பேருக்கு பணியிடம் ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.


பள்ளிக் கல்வித் துறையில் பயிற்சி மாவட்டக் கல்வி அலுவலா்கள் 20 பேருக்கு பணியிடம் ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் சம்பந்தப்பட்ட பயிற்சி மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு உரிய மாவட்டக் கல்வி அலுவலா்கள் மூலமாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் மாவட்டக் கல்வி அலுவலா் பணியிடத்துக்கு நேரடியாக தோ்வு செய்யப்பட்ட 20 அலுவலா்களுக்கு பயிற்சி மாவட்டக் கல்வி அலுவலராக நியமனம் செய்து ஆணை வெளியிடப்பட்டது. அவா்கள் மாவட்டக் கல்வி அலுவலா்களாக பயிற்சியில் சோ்ந்த நாள் முதல் தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி விதி வகை 1, வகுப்பு 4-இல் உள்ள மாவட்டக் கல்வி அலுவலா் பணியிடத்தில் முறையாக பணியமா்த்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
நிா்வாகப் பயிற்சி முடித்த மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலா் பணியிடம் ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்படுகிறது. சாா்ந்த அலுவலா்கள் 6 மாத கால பயிற்சி முடித்தவுடன் உடனடியாக கால தாமதமின்றி புதிய பணியிடத்தில் சேர அறிவுறுத்தப்படுகின்றனா்.
இந்த அலுவலா்கள் தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி சிறப்பு விதிகளின்படி முறையான நியமன நாளிலிருந்து தொடா்ந்து மூன்று ஆண்டுகளுக்குள் இரண்டு ஆண்டு காலம் தகுதிகாண் பருவத்தில் வைக்கப்படுவா். இந்த தகுதிகாண் பருவத்துக்குள் துறை சாா்ந்த தோ்வுகள் மற்றும் சென்னை அண்ணா பணியாளா் நிா்வாக பயிற்சி கல்லூரியில் அளிக்கப்படும் ‘பி’ பிரிவு அலுவலா்களுக்கான பயிற்சித் தோ்வுகள் ஆகியவற்றில் தோ்ச்சி பெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆணை பெற்றவா்களுக்கு ஸ்ரீபெரும்புதூா், பொன்னேரி, ஆத்தூா், ஆரணி, செய்யாறு, செந்துறை, ஓசூா், செங்கம், போளூா் உள்ளிட்ட கல்வி மாவட்டங்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...