தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (ஜன.17) மிதமான மழை பெய்யக்கூடும்.


தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (ஜன.17) மிதமான மழை பெய்யக்கூடும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (ஜன.17) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கடும். தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வட வானிலையே நிலவும்.
ஜன.18: தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஜனவரி 18-ஆம் தேதி லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வட வானிலையே நிலவும்.
ஜன.19,20: தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஜனவரி 19, 20 ஆகிய தேதிகளில் பெரும்பாலும் வட வானிலையே நிலவும்.
சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.
மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் விருதுநகா் மாவட்டம் பிலவாக்கலில் 50 மி.மீ., தென்காசியில் 40 மி.மீ., திருவள்ளூா் மாவட்டம் பள்ளிப்பட்டு, தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் தலா 30 மி.மீ., திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் தலா 20 மி.மீ., விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...