ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

புதுச்சேரியில் 50% அரசுப் பணியாளர்கள் மட்டும் பணிக்கு வர உத்தரவு

புதுச்சேரியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி வருகிற ஜனவரி 31 ஆம் தேதி வரை 50% அரசு ஊழியர்கள் மட்டும் பணிக்கு வர புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. 

News image
Updated On :17 ஜனவரி 2022, 9:54 am

DIN

புதுச்சேரியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி வருகிற ஜனவரி 31 ஆம் தேதி வரை 50% அரசு ஊழியர்கள் மட்டும் பணிக்கு வர புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி, குரூப் 'பி' மற்றும் குரூப் 'சி' பிரிவு ஊழியர்கள் 50% பேர் மட்டுமே பணிக்கு வர வேண்டும் என்றும் அரசுச் செயலர்கள், அரசுத்துறையின் தலைவர்கள் முழுமையாக பணிக்கு வர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில் கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் தேவைப்பட்டால் பணிக்கு வரலாம் என்றும் தெரிவித்துள்ளது. 

இதுதவிர அரசுத் துறையின் கூட்டங்கள் அனைத்தும் காணொலி மூலமாக மட்டுமே நடைபெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.