மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து பாதிப்பு

கர்நாடக மாநிலத்தில் இருந்து மரத்துண்டு பாரம் ஏற்றி வந்த லாரி திம்பம் மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதால் தமிழகம், கர்நாடகம் இரு மாநிலங்களுக்கு இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளத

News image

விபத்துக்குள்ளான லாரி

Updated On :21 ஜனவரி 2022, 6:54 am

கர்நாடக மாநிலத்தில் இருந்து மரத்துண்டு பாரம் ஏற்றி வந்த லாரி திம்பம் மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதால் தமிழகம், கர்நாடகம் இரு மாநிலங்களுக்கு இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது.

கர்நாடக மாநிலம் குஷால் நகர் பகுதியிலிருந்து கோவில்பட்டிக்கு மரக்கட்டை பாரம் ஏற்றிய லாரி திம்பம் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தது. இன்று காலை 6 ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்தது.

Story image

இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். லாரி மலைப் பாதையின் நடுவே கவிழ்ந்ததால் மலைப்பாதையில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

தகவலறிந்த சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். சத்தியமங்கலத்தில் இருந்து கிரேன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு லாரி மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இதன்காரணமாக திம்பம் மலைப்பாதையில் லாரி உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.