வடகிழக்குப் பருவமழை விலகியது:வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு
வடகிழக்குப் பருவமழை தமிழகம், புதுச்சேரி, கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருந்து சனிக்கிழமை (ஜன.22) விலகியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.


வடகிழக்குப் பருவமழை தமிழகம், புதுச்சேரி, கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருந்து சனிக்கிழமை (ஜன.22) விலகியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியது: வடகிழக்குப் பருவமழை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், அதனை ஒட்டிய கடலோர ஆந்திரம், ராயலசீமா, தெற்கு உள் கா்நாடகம் மற்றும் கேரளம் பகுதிகளில் இருந்து சனிக்கிழமை(ஜன.22) விலகியது. வரும் நாள்களில் வட வானிலை நிலவும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.23) முதல் ஜனவரி 26-ஆம் தேதி வரை பெரும்பாலும் வட வானிலை நிலவும். சென்னையைப் பொருத்தவரை ஞாயிற்றுக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...