ரஷியாவில் 50 ஆயிரத்தைக் கடந்த ஒருநாள் கரோனா பாதிப்பு!
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 57,212 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 57,212 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ரஷியாவில் மொத்த பாதிப்பு 11,044,986 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று பாதிப்பு 49,513 ஆக இருந்த நிலையில் இன்று பாதிப்பு 50 ஆயிரத்தைக் கடந்து பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மாஸ்கோவில் அதிகபட்சமாக 16,094 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 681 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 3,25,433 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோன்று ஒரேநாளில் 25,525 பேர் நோயிலிருந்து மீண்ட நிலையில், மொத்தம் 10,000,577 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். தற்போது 718,976 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரஷிய சுகாதார மையம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...