தமிழகத்தில் 30 ஆயிரத்தை தாண்டியது தினசரி பாதிப்பு
தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டியது.


தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டியது.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் 1,55,648 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 30,744 பேருக்கு தொற்று உறுதியானது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் மருத்துவக் கண்காணிப்பில் 1,94,697 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்படி, இன்று மட்டும் சென்னையில் 6,452 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கோவையில் 3,886 பேரும், செங்கல்பட்டில் 2,377 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். மற்றொருபுறம் மேலும் 23,372 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு இன்று வீடு திரும்பியுள்ளனா்.
இதையும் படிக்க- தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவராக பூச்சி முருகன் நியமனம்
இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 28 லட்சத்து 71,535 -ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 33 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,178-ஆக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...