
நீடாமங்கலம்: சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினத்தையொட்டி நீடாமங்கலத்தில் உதவும் மனங்கள் அமைப்பு சார்பில் நேதாஜி உருவபடத்திற்க்கு மாலை அணிவிக்கப்பட்டது.
நீடாமங்கலத்தில் உதவும் மனங்கள் அமைப்பு சார்பில் தேசத்தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125-ஆவது பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை நிறுவனர் எஸ்.எஸ்.குமார் தலைமையில் நடந்தது.
கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் பாபு மனோகரன் முன்னிலை வகித்தார்.
கலாம் மாணவர் இயக்க மாவட்ட தலைவர் ரியாஸ் அகமது வரவேற்றார்.
சேவாதள தலைவர் பி.சுப்ரமணியன் நேதாஜி உருவபடத்திற்க்கு மாலையணிவித்தார். ஆலோசகர் டி.எஸ்.கே.நேரு சிறப்புரையாற்றினார்.
பாஜக ஒன்றிய செயலர் விஜயன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.