ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு
இலங்கை அரசு தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதை தடுக்காவிட்டால் வருகிற பிப்ரவரி 2ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ராமேஸ்வ

கோப்புப்படம்

கோப்புப்படம்
இலங்கை அரசு தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதை தடுக்காவிட்டால் வருகிற பிப்ரவரி 2ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழக மீனவர்களின் மீது இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்துவதுடன் சமீப காலமாக கைது நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், தமிழக மீனவர்களின் 105 படகுகளை இலங்கை கடற்படை ஏலம் விடுவதை தடுக்காவிட்டால் வரும் பிப். 2 ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரியும் ராமேஸ்வரம் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...