முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

மானாமதுரை ஸ்ரீ அப்பன் பெருமாள் கோயிலில் மண்டல பூஜை விழா

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மேட்டுத்தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அப்பன் சீனிவாச பெருமாள் கோயிலில் மண்டல பூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது. 

News image

மானாமதுரை அப்பன் சீனிவாசப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற மண்டலபூஜை விழாவையொட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேதமாய் எழுந்தருளிய உற்சவர்

Updated On :26 ஜனவரி 2022, 12:37 pm IST

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மேட்டுத்தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அப்பன் சீனிவாச பெருமாள் கோயிலில் மண்டல பூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது. 

இக்கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றதை முன்னிட்டு அதைத்தொடர்ந்து நடந்த மண்டல பூஜை விழாவையொட்டி கோயில் வளாகத்தில்   கலசங்களில் புனித நீர் நிரப்பி வைத்து  யாகம் வளர்த்து சங்காபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது அங்கு ஸ்ரீதேவி - பூதேவி சமேதமாய் உற்சவர் அப்பன் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். 

அன்பின் யாகத்தின் நிறைவாக பூர்ணாஹூதியாகி கலச நீரால் மூலவர் அப்பன் சீனிவாச பெருமாளுக்கு அபிஷேகம் நடத்தி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடைபெற்றன. ஏராளமான ஆச்சாரியார்கள் மண்டல பூஜை விழாவை நடத்தி வைத்தனர்.

மண்டல பூஜை விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று அப்பன் சீனிவாசப் பெருமாளை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.