மானாமதுரை: உலகப் புகழ்பெற்ற சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் பேராலயத்தில் ஆண்டு பெருவிழாவையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை இரவு மின்விளக்கு ரத பவனி நடைபெற்றது.
இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் பேராலயத்தில் ஆண்டு பெருவிழா கடந்த 24 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் பங்கு இறை மக்கள் சார்பில் தினமும் இரவு வெவ்வேறு தலைப்புகளில் திருப்பலி பூஜைகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற மின்விளக்கு ரத பவனியை முன்னிட்டு பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் பங்கு இறை மக்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த கிறிஸ்தவ மக்கள் பங்கேற்று பிரார்த்தனை நடத்தினர்.
இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தின் திருத்தல அதிபர் இமானுவேல் தாசன் தலைமையில் ஏராளமான அருட் பணியாளர்கள் பிரார்த்தனைக் கூட்டத்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து மின்விளக்கு ரத பவனி நடைபெற்றது. திரு இருதய ஆண்டவர் சொரூபம் தாங்கிய மின்விளக்கு ரதம் திரு இருதய ஆண்டவர் பேராலயத்தை சுற்றி வலம் வந்தது. இதில் ஏராளமான கிறித்துவ மக்கள் பங்கேற்றனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் இமானுவேலுதாசன் இடைக்காட்டூர் சமூகம் முன்னேற்ற சங்கம், செல்ஸ் இளைஞர் பேரவை மற்றும் பங்கு இறை மக்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சண்டிகரில் படமாக்கப்படும் ரஜினி - ஷாருக்கான் காட்சி?

ஜாக்பாட்? ரயில்வே முனையமாக மாறிய பரங்கிமலை! விரைவு ரயில்கள் நின்று செல்ல கோரிக்கை!

தன்பாலின ஈர்ப்பாளரா மோஜ்தபா கமேனி? அமெரிக்க உளவுத்துறை தகவலால் திகைத்த டிரம்ப்!

படுகொலையை மாற்ற முயற்சி! - ஆப்கன் மருத்துவமனை மீதான பாக். தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்!
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

