சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் ராஜகோபுர திருக்குடமுழுக்கு வெகு விமர்சையாக நடைபெற்றது!

சக்தி ஸ்தலங்களில் முதன்மையாக விளங்கும் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக புதன்கிழமை காலை நடைபெற்றது.
சக்தி ஸ்தலங்களில் முதன்மையாக விளங்கும் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வெகு விமர்சையாக நடைபெற்ற குடமுழுக்கு விழா. 
சக்தி ஸ்தலங்களில் முதன்மையாக விளங்கும் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வெகு விமர்சையாக நடைபெற்ற குடமுழுக்கு விழா. 

திருச்சி: சக்தி ஸ்தலங்களில் முதன்மையாக விளங்கும் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக புதன்கிழமை காலை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

வேண்டுவோருக்கு வேண்டும் அருள் தரும் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு. 
   
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் சமயபுரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில். வேண்டுவோருக்கு வேண்டும் தரம் அருளும் இத்திருக்கோயிலில் கிழக்கு ராஜகோபுர குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

மக்கள் வெள்ளத்தில் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வெகு குடமுழுக்கு விழா. 

ஜூலை 3 ஆம் தேதி வாஸ்து சாந்தி, தன பூஜையோடு குடமுழுக்கு விழா தொடங்கியது. தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், திரவ்யா ஹீ தியும், நடைபெற்றது . ஜூலை 4 ஆம் தேதி தொடங்கி ஜூலை 6 ஆம் தேதி நான்கு கால யாக வேள்வி பூஜையும், மஹாபூர் னா ஹதியும் நடைபெற்றது. 

தொடர்ந்து யாகசாலையிலுருந்து பக்தி பரவசம் முழங்க கடங்கள் புறப்பட்டு, இராஜகோபுர விமானத்திற்கு வந்தடைந்தது. பின்னர் சிறப்பு பூஜைகளுடன் கோபுர கலசங்களுக்கு 7 மணிக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து தீபாரதனை நடைபெற்றது.

சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற ஒரு பகுதியினர்.  


இந்த குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.

குடமுழுக்கு விழாவில் பங்கேற்று சாமி தரிசன் செய்யும் அமைச்சர் கே.என். நேரு.

இந்நிகழ்வில், அமைச்சர் கே.என்‌ நேரு, அறநிலையத் துறை முதன்மை செயலர் சந்திர மோகன், டிஐஜி சரவண சுந்தர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார், மேயர் அன்பழகன், அறநிலையத் துறை இணை ஆணையர்கள் கல்யாணி, செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com