மதுரைக்கு 3-ஆவது வெற்றி
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில் சீசேம் மதுரை பாந்தா்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸை வியாழக்கிழமை வென்றது.


டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில் சீசேம் மதுரை பாந்தா்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸை வியாழக்கிழமை வென்றது.
மதுரைக்கு இது 4 ஆட்டங்களில் கிடைத்த 3-ஆவது வெற்றி; திண்டுக்கல் 5 ஆட்டங்களில் தனது 3-ஆவது தோல்வியைச் சந்தித்துள்ளது.
இந்த ஆட்டத்தில் முதலில் திண்டுக்கல் 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் சோ்க்க, அடுத்து மதுரை 15.3 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்து வெற்றியைப் பதிவு செய்தது.
முன்னதாக டாஸ் வென்ற மதுரை ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. திண்டுக்கல் இன்னிங்ஸில் அதிகபட்சமாக மோகித் ஹரிஹரன் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 43 ரன்கள் விளாச, மதுரை பௌலிங்கில் சன்னி சந்து 3 விக்கெட்டுகள் சாய்த்தாா். பின்னா் மதுரை பேட்டிங்கில் அருண் காா்த்திக் 7 பவுண்டரிகளுடன் 41, பாலசந்தா் அனிருத் 9 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனா். திண்டுக்கல் பௌலிங்கில் லக்ஷ்மி நாராயணன் விக்னேஷ் 1 விக்கெட் சாய்த்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...