புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

இரட்டை இலையை முடக்கக் கோரி வழக்கு: அபராதத்துடன் தள்ளுபடி

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கை அபராதத்துடன் சென்னை உயா் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

News image
Updated On :7 ஜூலை 2022, 6:23 am

DIN

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கை அபராதத்துடன் சென்னை உயா் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், அந்தக் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் ஜூலை 11-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இந்தப் பொதுக் குழு கூட்டத்துக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யுமாறு ஓபிஎஸ் தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என அந்தக் கட்சியின் முன்னாள் உறுப்பினா் பி.ஏ.ஜோசப் என்பவா் உயா் நீதிமன்றத்தில் புதன்கிழமை வழக்குத் தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி அமா்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், விளம்பர நோக்கத்துடன் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக கூறி மனுதாரருக்கு ரூ. 25,000 அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்தவதாக உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.