இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டில் தலைசிறந்த வீரரும், அனைத்து விதமான கோப்பைகளையும் வென்ற கேப்டனுமான தோனி இன்று தனது 41வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
இவருக்கு சக கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் டிவிட்டரில் வாழ்த்து பதிவு செய்துள்ளார்.
இதையும் படிக்க | மாட்டிறைச்சி ட்வீட்: சர்ச்சையில் சிக்கிய சென்னை காவல்துறை!
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், “கிராமங்களில் இருந்து வரும் லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்கள் கனவைத் தொடர, உங்களின் இணையற்ற சாதனைகள் நம்பிக்கை அளித்து வருகிறது. சென்னையில் நீங்கள் மீண்டும் விளையாடுவதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள் தோனி” எனப் பதிவிட்டுள்ளார்.
அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெற்ற தோனி, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஊக்கமளிக்கும் மருந்தே விருது

தேர்தல் விதிமுறை அமல்: வேலூரில் தலைவர்களின் படங்கள் அகற்றம்!
பூவன்பழம் புட்டு
கேழ்வரகு லட்டு
வீடியோக்கள்

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

