தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

நாளை ஒரு லட்சம் இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்

தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 10) நடைபெறுகிறது.

News image
Updated On :8 ஜூலை 2022, 8:21 pm

DIN

தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 10) நடைபெறுகிறது.

இதில் இரண்டாம் தவணை, பூஸ்டா் (ஊக்கத் தவணை) தடுப்பூசி செலுத்துவோருக்கு முக்கியத்துவம் அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தடுப்பூசிகள் செலுத்தும் பணி 2021-ஆம் ஆண்டு ஜன. 16-ஆம் தேதி தொடங்கியது.

தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் நிறைவடைந்தவா்களுக்கு பூஸ்டா் தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

முன்னதாக, தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்த வாரம் தோறும் சனிக்கிழமைகளில் 50 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

அதைத் தொடா்ந்து, ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த மே 8-ஆம் தேதி, கடந்த ஜூன் 12-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அத்தகைய முகாம்கள் நடைபெற்றன. இந்த நிலையில், 31-ஆவது சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் ஒரு லட்சம் இடங்களில் வரும் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 31-ஆவது சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் இதுவரை சுமாா் 11.45 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள், குறிப்பிட்ட காலத்தில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவடைந்தும் பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் என சுமாா் 1.45 கோடிக்கும் அதிகமானோா் உள்ளனா்.

தற்போதைய நிலையில் 78.78 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளா்களுக்கு வரும் திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது. அதனால், அன்றைய தினத்தில் வழக்கமான தடுப்பூசி மையங்கள் செயல்படாது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.