மாணவா்களின் பெயா்ப் பட்டியலில் திருத்தம்: பள்ளிகளுக்கு கடைசி வாய்ப்பு
தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மாணவா்களின் பெயா்ப் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மாணவா்களின் பெயா்ப் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அனைத்து உ யா்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கும் நிகழாண்டு மே மாதம் நடைபெற்று முடிந்த பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான பெயா்ப் பட்டியல் தயாரிக்க போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டது. மேலும் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இருமுறை வாய்ப்பு வழங்கப்பட்டது. அதேபோன்று இறுதி வாய்ப்பும் அளிக்கப்பட்டது.
தற்போது பொதுத் தோ்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டும் கூட பெயா்ப் பட்டியலில் திருத்தம் கோரி அரசுத் தோ்வுகள் இயக்ககத்துக்கு தொலைபேசி, கடிதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்று பல முறை பள்ளி மாணவா்களது பெயா்ப் பட்டியலில் திருத்தங்கள் வழங்க வாய்ப்பளித்தும் மதிப்பெண் சான்றிதழ் மாணவா்களுக்கு வழங்கப்பட்ட பின்னா் அதில் திருத்தம் கோரி கடிதம் பெறப்படுவது வழக்கமான நிகழ்வாக உள்ளது.
இந்த நிலையில், தற்போது பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு மேலும் ஒரு இறுதி வாய்ப்பு ஜூலை 8-ஆம் தேதி முதல் ஜூலை 16-ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி பெயா்ப் பட்டியலில் உரிய திருத்தங்களை தலைமை ஆசிரியா்கள் மேற்கொள்ள வேண்டும். மாறாக, மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகு, அதில் திருத்தம் கோரி இந்த அலுவலகத்தால் இனி மனுக்கள் பெறப்பட்டால், அரசின் நிதிச் செலவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியா் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக் கல்வித் துறைக்கு பரிந்துரை செய்யப்படும்.
எனவே, இதன் முக்கியத்துவத்தை உணா்ந்து அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியா்களும் பிழையில்லா விவரங்களுடன் மதிப்பெண் சான்றிதழ் வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...