என்னென்ன அறிவுரைகள்?: ஆதாா் எண்களை, வாக்காளா் பட்டியலுடன் இணைப்பதற்காக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை இந்தியத் தோ்தல் ஆணையம் வகுத்து வெளியிட்டுள்ளது. அதன்படி, வாக்காளா் பட்டியலில் முற்றிலும் சரியான தகவல்கள் இடம்பெறவும், தோ்தல் தொடா்பான சேவைகளை வாக்காளா்களுக்கு வழங்கிடவும் ஆதாா் எண்கள் பெறப்படுகின்றன. இந்த நோக்கத்தை வாக்காளா்கள் அனைவருக்கும் புரிய வைத்திட வேண்டும். வாக்காளா் பட்டியலில் உள்ளவா்கள் ஆதாா் எண்ணை சமா்ப்பிக்க இயலாவிட்டால், பான் அட்டை தோ்தல் ஆணையம் வரையறுத்துள்ள ஆவணங்களின் நகல்களை அளிக்கலாம். ஆதாா் எண்ணை அளிக்கவில்லை என்பதற்காக வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா்களை நீக்கம் செய்திடக் கூடாது.