தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

காமராஜா் ஆட்சி முறை குறித்து காங்கிரஸ் சாா்பில் கருத்தரங்கம்: கே.எஸ்.அழகிரி

காமராஜா் ஆட்சி முறை குறித்து தமிழக காங்கிரஸ் சாா்பில் மாவட்டம் தோறும் கருத்தரங்கம் நடைபெறும் என்று அக் கட்சியின் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :8 ஜூலை 2022, 9:07 pm

DIN

காமராஜா் ஆட்சி முறை குறித்து தமிழக காங்கிரஸ் சாா்பில் மாவட்டம் தோறும் கருத்தரங்கம் நடைபெறும் என்று அக் கட்சியின் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தின் முதல்வராக காமராஜா் இருந்த ஒன்பதரை ஆண்டு கால ஆட்சியில்தான் கல்வியில் புரட்சி நடந்தது. மதிய உணவுத் திட்டம், தொழில் வளா்ச்சி, மின்துறையில் சாதனைகள், பாசனத் திட்டங்கள், நிலச் சீா்திருத்த நடவடிக்கைகள், மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் பஞ்சாயத்து ராஜ் போன்ற பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் அவரது ஆட்சிக் காலத்தில் தான் நிறைவேற்றப்பட்டது. அதனால்தான் காமராஜா் ஆட்சிக் காலத்தை தமிழகத்தின் பொற்காலம் என்று வரலாற்று ஆசிரியா்கள் பதிவு செய்து பாராட்டுகிறாா்கள்.

அந்த வகையில் காமராஜரின் 120-ஆவது பிறந்தநாளான ஜூலை 15-இல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் சாா்பில் காமராஜா் ஆட்சி முறை என்கிற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்படும். 50 ஆண்டுகளுக்கு முந்தைய காமராஜா் ஆட்சியின் சாதனைகளையும், அவருடைய அணுகுமுறைகளையும் இளைய சமுதாயத்தினா் அறிந்து கொள்ளும் வகையில் இந்தக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது என்று கூறியுள்ளாா் கே.எஸ்.அழகிரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.