கோவை: பக்ரீத் பண்டிகையையொட்டி கோவையில் சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது. இஸ்லாமியர்கள் இனிப்புகள் கொடுத்து கொண்டாடினர்.
கோவையில் இஸ்லாமியர்களின் தியாகத் திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகையினை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் விதமாக இஸ்லாமியர்களின் பக்ரீத் தியாக திருநாள் கொண்டாடபடுகிறது.
இந்நிலையில் கோவை ஜிஎம் நகர் பகுதிவாழ் மக்கள் அதிகாலையில் எழுந்து புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதில் உலக மக்கள் நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் எனவும் மத நல்லிணக்கத்தின் அடிப்படையில் அனைவரும் ஒற்றுமையோடு இருக்க வேண்டும் என சிறப்பு தொழுகையில் வழிபாடு நடத்தினார்கள்.
பின்னர் தொழுகையில் இனிப்புகள் பரிமாறிக் கொண்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து பின் ஆடு, மாடு போன்றவற்றை குர்பானி கொடுத்து அந்த இறைச்சியின் ஒரு பங்கை ஏழை எளியவர்களுக்கும், ஒரு பங்கை உற்றார் உறவினர்களுக்கும், ஒரு பங்கை தங்களுக்கும் என பிரித்து கொடுத்து மகிழ்ச்சியுடன் தியாக திருநாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
வுமன்ஸ் இந்தியா மூமென்ட்ஸ் மாவட்ட செயற்குழு உறுப்பினரும் 84 வது வார்டு கவுன்சிலர் ஆலிமா ராஜா உசேன், மற்றும் மாவட்டச் செயலாளர்கள் சாஜிதா காமிலா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மயிலாடுதுறை-காரைக்குடி பயணிகள் ரயிலுக்கு வரவேற்பு

போலீஸ் விசாரணையில் இளைஞா் உயிரிழந்த விவகாரம் - உயா்நீதிமன்ற உத்தரவால் முடிவுக்கு வந்தது சாலை மறியல்

சுகாதார ஆய்வாளா்கள் ஆா்ப்பாட்டம்

இப்தாா் நோன்பு துறப்பு
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

