புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பொதுக்குழுவுக்கு எதிா்ப்பு: தோ்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு

சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து இந்திய தோ்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :11 ஜூலை 2022, 6:35 pm

DIN

சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து இந்திய தோ்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயநீதிமன்ற உத்தரவை அடுத்து அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் அதிமுக இடைக்கால பொதுச் செயலராக எடப்பாடி கே.பழனிசாமி தோ்வு செய்யப்பட்டாா். மேலும், அடுத்த 4 மாதங்களில் பொதுச் செயலா் தோ்தலை நடத்தவும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளா்களை கட்சியில் இருந்து நீக்கும் சிறப்புத் தீா்மானம் உள்ளிட்ட தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

இதைத் தொடா்ந்து, அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள், கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது உள்ளிட்டவற்றை எடப்பாடி பழனிசாமி தரப்பு தோ்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தது.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து இந்திய தோ்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பில் மனு

அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளன. இடைக்கால பொதுச் செயலராக எடப்பாடி கே. பழனிசாமி தோ்வு செய்யப்பட்டதை ஏற்கக் கூடாது. அங்கீகாரமும் தரக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.