உச்சகட்ட பரபரப்பு: வானகரத்தில் இபிஎஸ்; ராயப்பேட்டையில் ஓபிஎஸ்
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்திற்கு எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுடன் அதிமுக கொடி ஏந்தி வருகை தந்துள்ளார்.


சென்னை: சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்திற்கு எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுடன் அதிமுக கொடி ஏந்தி வருகை தந்துள்ளார்.
ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் தடையை உடைத்து ஓ.பன்னீர்செல்வம் நுழைந்துள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகம் நோக்கி வந்த ஓபிஎஸ் வாகனம் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். தடையை உடைத்து ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் ஓ.பன்னீர்செல்வம் நுழைந்தார்.அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்ற ஓபிஎஸ் பால்கனியில் நின்றபடி தொண்டர்களை சந்தித்தார்.
இபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்கியதில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல்
கட்டை, கம்புகளை வைத்தும், கற்களை வீசி எறிந்தும் இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பு ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் பதற்றத்தை தணிக்க காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்,
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...